உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தை நடத்த வேண்டுமென, எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இந்த சம்பவம் நடந்தது.
மூன்று நாள் விவாத கோரிக்கைக்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பாக ஒரு முடிவை எட்ட வேண்டும் என்றார்.
இந்த அறிக்கையில் தங்கள் கடமைகளை புறக்கணித்த நபர்களின் பெயர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது. இருப்பினும் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி பெயரிடப்படவில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் இந்த விஷயத்தை விவாதத்தின் போது விவாதிக்க முடியும் என்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அறிக்கையின் உள்ளடக்கம் பற்றி விவாதம் நடத்த விரும்பம் தெரிவித்ததாக அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.
சபாநாயகருடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து விவாதத்திற்கு ஒரு திகதி நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார்.