கெஸ்பெவ நீதிமன்றத்தின் முன் ஒரு பெண் உட்பட இருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (25) நடந்தது.
படுகாயமடைந்த இருவரும் பிலியந்தல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
60 வயதான சந்தேகநபர் அந்த பெண்ணிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். நீதமன்ற உத்தரவுப்படி தாபரிப்பு பணம் வழங்கி வந்தவர், கடந்த 3 மாதங்களாக அதை வழங்கவில்லை. இது தொடர்பில் இன்று அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் முன்பாக வைத்து அந்த பெண்ணின் தலை, உடலில் கூரிய கத்தியினால் குத்தியுள்ளார். பெண்ணை காப்பாற்ற முயன்ற அவரது மருமகனும் கத்திக்குத்திற்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
சந்தேக நபரை கத்தியுடன் நீதிமன்றத்தின் முன் பொலிசார் கைது செய்தனர்.