Pagetamil
இந்தியா

முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

11 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பிற நிர்வாகிகள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்

அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவற்றில் முதன்மையானது, அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு, தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலை நிமிர்ந்திடச் செய்வோம். தமிழர் வாழ்வு மலர்ந்திட தியாகத்தலைவி சசிகலா அவர்களின் நல்வாழ்த்துகளோடு செயல்படும் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை தமிழக முதல்வர் அரியணையில் அமரவைக்க அயராது உழைக்க சூளுரை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா சென்னை வீடு திரும்பிய நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஒருங்கிணைந்து பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்மூலம், அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதற்கு சசிகலா விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதிமுக தரப்பிலிருந்து, சசிகலாவை ஏற்றுக்கொள்வதில்லை என்று பல தலைவர்களும் தெரிவித்துவிட்டனர்.

இந்தநிலையில்தான், இன்னொரு பக்கம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மூலமாக மூன்றாவது அணி அமைக்க முயற்சிகள் நடக்கின்றன.

சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொண்டால் அந்தப் பக்கமாக போவது, அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மூலமாக கூட்டணி அமைத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது அரசியல் வியூகமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, சசிகலா நல்லாசியுடன் டிடிவி தினகரனை முதல்வராக அயராது பாடுபட வேண்டும் என்று அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது அணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில்தான் அமையப்போகிறது, தினகரன்தான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது.

மற்றொரு தீர்மானத்தில், எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கழகத்தை சிறப்பாக நடத்திவரும் டிடிவி தினகரனுக்கு பாராட்டை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment