முஸ்லீம் சமூகத்தின் அடக்கம் செய்வதற்கான உரிமையை மதிக்குமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC).
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் உரையாற்றிய பின் பொதுச்செயலாளர் டொக்டர் யூசெப் அல் ஒதமைன், தமது அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளில் வாழும் முஸ்லீம் சமூகங்களின் நிலைமைகளை கண்காணிக்க தமது அமைப்பு அக்கறையுடன் இருப்பதாக தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் போது இஸ்லாமிய விதிகளைப் பின்பற்றி கோவிட் -19 தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுவதால், இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் நிலைமை குறித்து OIC அக்கறை கொண்டுள்ளது என்றார்.
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம் சமூகத்தினரை அடக்கம் செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் மதிக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை OIC வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.