அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவில், அவரது சகோதரர் அர்ஜூன ரணதுங்கவின் சாயல் தெரிவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று (23) நடந்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இலங்கைக்கு வந்தார். அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர் அலரி மாளிகையில் இரண்டு பிரதமர்களும் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.
ஒப்பந்தங்களின் முன்னர் தனது அமைச்சர்களை பிரதமர் மஹிந்த அறிமுகம் செய்து வைத்தார். பிரசன்ன ரணதுங்கவை அறிமுகம் செய்த போது, “Cricketer’s brother” என அறிமுகம் செய்து வைத்தார்.
இருவருக்குமிடையில் ஒற்றுமை தெரிவதாக இம்ரான் கான் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1