25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

யாழில் காப்பகம் என்ற பெயரில் நாய்களிற்கு நடக்கும் கொடூரம்… உணவின்றி இறந்த நாய்களையே சாப்பிடும் அவலம்!

நாய்கள் காப்பகமென்ற பெயரில் யாழில் நடக்கும் கொடூரத்தை சட்டத்தரணியொருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், யாழ் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்களிற்கு தினமும் உணவளித்து பராமரித்து வருகிறார். யாழ் நீதிமன்ற கட்டட தொகுதிக்குள்ளும் சில நாய்களை உணவளித்து பராமரித்து வருகிறார்.

அந்த நாய்கள் திடீரென காணாமல் போயிருந்தன. அது பற்றி அவர் விசாரித்த போது, நாய்களை காப்பகத்திற்கு பிடித்து கொடுத்து விட்டதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

தான் பராமரித்த நாய்களிற்கு என்ன நடந்தது என அவர் தேட தொடங்கியது, மனித நேயத்தின் பெயரால் நாய்களிற்கு நடக்கும் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவல்-

தியாகி அறக்கொடை நிறுவனத்தினரால் அரியாலையில் நடத்தப்படும் நாய்கள் காப்பகத்தில் கையளிக்கப்பட்டிருந்த யாழ் நீதிமன்த்திலிருந்த ஆறு நாய்களும் தற்போது உயிருடன் இல்லை. இது ஒரு கொலை. ஆனால் தங்களுடைய உயிர்களை ஈய்ந்து நாய்களுக்கு இந்த காப்பகத்தில் நடப்பவற்றை எமது நீதிமன்ற நாய்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.

நீதிமன்ற நாய்கள் அரியாலை காப்பகத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கப்படா விட்டிருந்தால் இந்தக் காப்பகங்களில் நடக்கும் அநியாயங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. அதுவும் குடாநாட்டிலுள்ள இரண்டு காப்பகங்களில் எந்தக் காப்பகத்தில் நீதிமன்ற நாய்கள் கையளிக்கப்பட்டன என்பதை ஆரம்பத்தில் நீதிமன்ற ஊழியர்கள் தெளிவாகத் தெரிவிக்காததாலேயே நான் இரண்டு காப்பகங்களுக்கும் சென்று நாய்களைத் தேடவேண்டி வந்து இந்த அட்டூழியங்களை அம்பலப்படுத்த முடிந்தது.

இப்போது அரியாலையிலுள்ள தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின் காப்பகத்தில்தான் நீதிமன்ற நாய்கள் கையளிக்கப்பட்டன என்பதை சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஊழியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தியாகி அறக்கொடை நிறுவனத்தினரால் நடாத்தப்படும் அரியாலையிலுள்ள காப்பகத்திற்கு முதலில் நான் போனபோது அங்கு ஒருவரும் இருக்கவில்லை. உள்ளே இரண்டு பெரிய கூடுகளிலும், பல சின்னக் கூடுகளிலும் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. வெளியில் ஒரு பெரிய நாய் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதற்கருகில் ஒரு காய்ந்த ஈயச் சட்டியிருந்தது. நாய்கள் எல்லாம் பெரிய சத்தமிட்டுக் குலைத்துக்கொண்டிருந்தது. அது பசியால் என்பதை நான் மறு நாட்களில் அங்கு சென்ற பின்னர் தெரிந்து கொண்டேன்.

நானும் எனது வாகன சாரதியும் தம்பி, ஐயா, அண்ணை எனக் கத்திக் கூப்பிட்டும் ஒருவரும் வெளியே வரவில்லை. நாங்கள் ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று பார்ப்போம் என வெளியில் நின்று கொண்டிருந்த பின்னர் ஒரு இருபது வயதுடைய இளைஞர் அவர் தங்குவதற்கென உள்ளுக்குள் அமைக்கப்பட்டிருந்த ஒரு தகரக் கொட்டகையிலிருந்து ஒன்றும் கேட்காததுபோல் வெளியே வந்தார்.

அவரை நான் கூப்பிட்டு ஏன் நாய்களுக்கு தண்ணிகூட வைக்கவில்லை, சாப்பாடுகள் என்ன மாதிர் என்று கேட்டபோது, அவர் அங்கேயே சமைப்பதாகவும், மீனுக்காகப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். அப்போது நேரம் மதியம் பதினொரு மணி. யாழ்ப்பாண நீதிமன்றத்திலிருந்து கையளிக்கப்பட்ட நாய்களைப் பார்க்கவேண்டுமென கேட்டபோது அப்பிடி ஒரு நாயும் அங்கு கையளிக்கப்படவில்லயென அவர் உறுதியாகக் கூறியபடியால் நான் திரும்பி வந்து விட்டேன். உள்ளுக்குள் போனால் நாய்கள் கடிக்கும் எனச் சொல்லி தனது காலில் இருந்த சில தளும்புகளையும் நாய்கள் கடித்து ஆறிய காயங்களெனக்காட்டினார்.

மறுநாள் நான் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குளை முடித்துக்கொண்டு திரும்பும்போது நாய்களுக்கு கோழிப் பொரியல்கள், பணிஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பவும் போனேன். இது நடந்தது கடந்த வியாழக் கிழமை.

அங்கு நான் போனபோது பின்னேரம் 2 மணி. அதே இளைஞர் நின்றார். நாய்களுக்கு சர்பபாடுபற்றிக் கேட்டபோது மீனுக்காகப் பார்த்துக்கொண்டிருப்பதாக அதே கதையைச் சொன்னார். நாய்களை உள்ளுக்குப்போய் பார்க்க வேண்டுமென்று கேட்டபோது திரும்பவும் நாய்கள் கடிக்குமென்ற கதையைச் செர்னனார். நான் நாய்கள் கடித்தால் பரவாயில்லை, உள்ளுக்குப் போகவேண்டுமென்று கேற்றைத் திறந்துகொண்டு உள்ளுக்குப்போய் ஒவ்வொரு கூண்டாகப் பார்த்தால், நீதிமன்ற நாய்கள் எவையும் அங்கு இல்லை. நாய்களெல்லாம் எலும்பும் தோலுமாய் குரைத்து அலறிக் கொண்டிருந்தன. நான் கொண்டுபோயிருந்த சாப்பாடுகளை – அவையெதுவும் அவைக்குப் போதுமானவையல்ல – அவை குலைப்பதை நிறுத்தி வாலாட்டத் தொடங்கி விட்டன.

மறுநாள் வெள்ளிக்கிழமை நான் திரும்பவும் வீட்டில் சமைத்துக்கொண்டு அங்கு போனேன். சின்ன நாய்கள் – பத்து இருக்கும் – கம்பி வேலிக்குக்கீழால் வெளியே வந்து இருந்தன். இந்தக் காப்பகத்துக்கு அண்மையில் ஒரு இந்துக் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு நாய்கள் காப்பகத்திற்கு ஒரு ஐந்து நிமிடம் நடந்தே போக வேண்டும். அன்றைக்கு அந்தக் கோவில் சீமெந்து தரையில் யாரோ நெல்லைக் காயவிட்டிருந்தார்கள். ரெண்டு நாய்க்குட்டிகள் – காப்பகத்திலிருந்து வந்திருக்க வேண்டும் – அந்த நெல்லைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. காப்பகத்தைச் சுற்றி ஒரே வயல் காணிகள். மனித நடமாட்டமே இல்லை. நான் கொண்டுசென்றிருந்த சாப்பாட்டை மட்டுமே அவைகளுக்குப்போட முடிந்தது. தண்ணி இல்லை. நான் போட்ட சாப்பாட்டை அந்த நாயக் குட்டிகள் சாப்பிட்ட விதத்திலிருந்து அவை பல நாட்கள் சாப்பாடில்லாமல் இருந்திருக்கின்றன என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

அப்போது அங்கு ஒரு கூண்டுக்குள் ஒரு நாய் செத்திருந்ததையும், ரெண்டு நாய்கள் உயிரோடு குரைத்தும் அலறியும் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். கூண்டுக்குள்ளிருந்த நாய்களுக்கு என்னால் தண்ணீர்வைக்க முடியவில்லை. வெளியிலிருந்த நாய்களுக்கு மட்டும் தண்ணீரை வைத்து, காப்பகத்தின் வெளி கேற்றையும் வித்தியாசமான முறையில் கட்டிவிட்டு திரும்பியிருந்தேன்.

மறுநாள் மாலை நான் திரும்பவும் சாப்பாடு சமைத்துக்கொண்டு போனபோது, காப்பகத்தின் வெளி கேற் நான் பூட்டியமாதிரி அப்படியே இருந்தது. நாய்களுக்கு தண்ணியும் இல்லை சாப்பாடும் இல்லை. முதல் நாள் இறந்திருந்த நாயின் உடலை மற்றைய இரண்டு நாய்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. என்னோடு வந்திருந்த ஓட்டோ சாரதி வசந்த் அழுது குளறி அழத் தொடங்கிவிட்டான். இயலுமானவரை கொண்டு சென்றிருந்த சமைத்த சாப்பாட்டை எல்லா நாய்களுக்கும் பகிர்ந்து போட்டுவிட்டு, வெளியாலிருந்த ரெண்டு பெரிய நாய்களுக்கும், மொத்தம் 9 நாயக் குட்டிகளுக்கும் மட்டும் தண்ணீரை அங்கிருந்த பாத்திரங்களில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன்.

https://www.facebook.com/rengan.devarajan/posts/3528971793892401

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

Leave a Comment