25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

பேருந்தை வழிமறித்து கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை நடுவீதியில் இறக்கிய கிராம இளைஞர்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம், மாணிக்கபுரம் பகுதியில் கிராம மக்கள் அதிகாலை வேளை ஆடைத்தொழில் சாலைக்கு ஊழியர்களை ஏற்றிசெல்லும் பேருந்துக்களை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (23) முன்னெடுத்துள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மாணிக்கபுரம், வள்ளுவர்புரம் கிராமத்தினை சேர்ந்த சிலருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கிராமத்தில் மக்களை கொவிட் 19பாதுகாக்கும் நோக்கில் கிராம மட்ட அமைப்புக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கிராமத்தில் இருந்து ஆடைத் தொழில்சாலைக்கு செல்வர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

அதிகாலை வேளை ஆடைத்தொழில்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகளை கிராமத்தில் இருந்து வெளியில் செல்லவிடாமல் தடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பிரசன்னமாகி இருந்த புதுக்குடியிருப்பு பொலீசார் பேருந்துக்களை செல்லவிடுமாறு அறிவுறுத்தியும் மக்களால் பேருந்து தடுக்கப்பட்டு அதில் பயணித்தவர்கள் இறக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஆடைத்தொழில்சாலை ஊழியர்கள் செல்வதால் கொவிட் 19 கொத்தணியாக உருவாகும் என்ற அச்சத்தினால் பணியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் எடுக்கப்பட்டு கிராமத்தினை பாதுகாக்கவேண்டும் என கிராம அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த கிராமங்களில் இருந்து 200 வரையான இளைஞர் யுவதிகள் புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி மாவட்டங்களில் இயங்கிவரும் ஆடைத் தொழில்சாலையில் பணியாற்றி வருகின்றார்கள்.

ஆடைத்தொழில்சாலை நிர்வாகங்கள் வந்து பிரச்சனைக்கான தீர்வு தரும்வரை பேருந்துக்களையும் ஊழியர்களையும் கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு: கடத்திய மச்சானும் கைது!

Pagetamil

Leave a Comment