28.7 C
Jaffna
April 12, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பம் உருவாக்க அப்பிள் நிருவனம் திட்டம்.

அப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க பொறியாளர்களை பணியல் அமர்த்தும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.

6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பம் உருவாக்க அப்பிள் திட்டம்

அப்பிள் நிறுவனம் 6 ஆம் தலைமுறை செல்லுலார் இணைப்பு அதாவது 6ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியல் அமர்த்தும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.. இதற்கான அறிவிப்பை அப்பிள் தனது வலைதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டு இருக்கிறது.

வயர்லெஸ் அமைப்பு ஆய்வு பொறியாளர்கள் அப்பிள் நிறுவனத்தின் சிலிகான் வேலி மற்றும் சான் டெய்கோ அலுவலகங்களில் பணியாற்றுவர். எதிர்கால அப்பிள் சாதனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எனும் தலைப்பில் அப்பிள் புதிய பணி பற்றி விவரிக்கிறது.

இந்த பிரிவில் பணியாற்றுவோர் 6ஜி வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளுக்கான ரேடியோ நெட்வொர்க்குகளை வடிவமைப்பார்கள் என அப்பிள் தெரிவித்து உள்ளது. 6ஜி தொழில்நுட்பம் இன்றைய தேதியில் தொலைதூர கனவு ஆகும். தற்சமயம் 5ஜி தொழில்நுட்பம் மெல்ல பயன்பாட்டுக்கு வரத் ஆரம்பித்துள்ளது .
எனினும், 4ஜி எல்டி, உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் ஆக இருக்கிறது. அப்பிள் நிறுவனம் 6ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோரில் முன்னணியில் இருக்க திட்டமிட்டு உள்ளது. அப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அனைத்து ஐபோன் 12 சீரிஸ் மாடல்களும் 5ஜி வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!