களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்நேயாளி ஒருவருக்கு தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
பழுகாமத்தினைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பனடோலை கூடுதலாக விழுங்கிய காரணத்தினால் நேற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அருத்திய மாத்திரைகளை அகற்றும் முகமாக மூக்கின் ஊடாக குழாய் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த தாதிய உத்தியோகத்தர் ஆத்திரமடைந்த நிலையில் நோயாளியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அவர் அறைந்த அடையாளம் யுவதியின் கன்னத்தில் காணப்படுவதாக பெற்றோர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தானர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
3
+1
+1