25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

கிழவன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கிறிஸ்தவ சபைக்கூடம்; ஊடகவியலாளர் தவசீலன் மாங்குளம் பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற கிறிஸ்தவ ஆலயம் தொடர்பில் இன்று வரை பிரதேச செயலகமோ  பிரதேச சபையோ  எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் குறித்த விடயம் தொடர்பில்  ஊடகவியலாளர்கள் தவசீலன் அவர்கள் முகநூலில் “கிழவன்குளத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்கூடம் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு இலஞ்சமா? விரைவில்” என  பதிவு ஒன்றை மேற்கொண்டிருந்தார்

இதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த் அவர்கள்  மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சென்று தன்னை அவமானப்படுத்தி உள்ளதாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன்  அவர்களை இன்று மாலை 5 மணிக்கு மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருகை தருமாறு மாங்குளம் பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்கான ஆலயத்துக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாது சட்டவிரோத நடவடிக்கைக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்கள் துணைபோவதாக  சுமார் ஒரு வருடத்துக்கு மேலதிகமாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கிழவன்குளம் பகுதியில் தனியார் ஒருவருக்கு வாழ்விடத்திற்கென வழங்கப்பட்ட காணியில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக கிறிஸ்தவ சபைக்கான ஆலயம் ஒன்றினை அமைத்து வந்தனர் .

இந்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கும் பிரதேச சபைக்கும் பலதடவைகள் அறிவிக்கப்பட்டும் குறித்த சட்ட விரோத செயற்பாட்டுக்கான சட்ட நடவடிக்கைகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் மாறாக சட்டவிரோத நடவடிக்கைக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்கள் துணைபோவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து பிரதேச சபை தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் ஊடகங்களில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதனை தொடர்ந்து கட்டிட பணிகளை நிறுத்துமாறு பிரதேச சபையினால் 2019-12-31 அன்று கட்டிடத்தில் தடை உத்தரவு பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த தடையுத்தரவு பிரசுரத்தை கிழித்தெறிந்த ஆலயத்திற்கான கட்டுமான பணியை மேற்கொண்ட நபர்கள் தொடர்ச்சியாக சபை கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். விடுமுறை தினங்களை மையப்படுத்தி மிகத் துரிதமாக இரகசியமான முறையில் இந்த வேலைத்திட்டங்கள் நகர்த்தப்பட்ட போது மீண்டும் இந்த விடயம் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு தெரியப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மீண்டும் கட்டிடத்திற்கான தடையுத்தரவை பிரதேச சபையினர் 2020-03-17 அன்று வழங்கி கட்டுமான பணிகளை நிறுத்தியிருந்தனர்.

எனினும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் தொடர்பில் எந்த சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை முதல் தடவை சுட்டிக்காட்டிய போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இரண்டாவது தடவையும் ஒட்டப்பட்ட பிரசுரம் கிழிக்கப்பட்டு வேலைத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ச்சியாக பிரதேச சபைக்கு கிராமத்தில் இருந்து சென்ற எதிர்ப்புகளின் விளைவாக பிரதேச சபையினால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதோடு கட்டுமான பணிகள் பூரணமாக இடை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் குறித்த காணி தனிநபர் ஒருவருக்கு வாழ்விடத்துக்கென வழங்கப்பட்ட காணி எனவும் புத்தசாசன அமைச்சின் அனுமதி இன்றிஆலயத்தை சட்டவிரோதமாக அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் அவர்கள் குறித்த காணியை சட்ட விரோதமாக கட்டப்படட கிறிஸ்தவ சபைக்கு வழங்குவதற்கு 14.09.2020 அன்று ஒட்டுசுட்டான் பிரதேச காணி பயன்பாட்டு குழுக் கூட்டத் தீர்மானத்துக்காக கொண்டு வந்திருந்தனர். இதன்போது கிராமத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதி ஒருவர் சட்டவிரோதமான செயற்பாடுகளை நீங்கள் இவ்வாறு சட்ட நடவடிக்கையாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கையானது எதிர்காலத்தில் தொடர்ச்சியாக அனைவரையும் சட்டவிரோதமான செயற்பாடுகளை செய்து அதனை சட்டபூர்வமாக ஆக்குவதற்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.

அதன் அடிப்படையில் குறித்த காணி வழங்கப்படுவதில்லை என தீர்மானித்து காணிப் பயன்பாட்டு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் சட்டவிரோத கட்டிடத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர்  காணி பயன்பாட்டு குழு கூட்டத்தில் உறுதி அளித்திருந்தார்.

இவ்வாறாக சட்டவிரோதமாக ஒருவருடைய வாழ்விட காணியில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படாத நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் தாண்டியும் குறித்த கட்டிடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு பல்வேறு பின்புலங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த் திருமுறிகண்டி பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரை தாக்கி காணி பிரச்சனை தீர்க்க முற்பட்டவர்  வேறு பல நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து இருக்கின்ற போதும் குறித்த கிழவன்குளம் கட்டுமானப் பணி விடயத்தில் குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

குறித்த இவ்வளவு முயற்சிகளுக்கு மத்தியிலும் போலீஸ் முறைப்பாடு உள்ளபோதும்  ஆலய கட்டுமான பணிகள் நிறைவு செய்து மின்சார இணைப்பு பெற்று ஆலயத்துக்குள் பேனர் கடத்தப்பட்டு எவ்வாறு செயற்பாடுகள் நடைபெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்நிலையில் அதிகாரிகள் பிரதேச சபை நடவடிக்கை எடுக்காமைக்கு  குறித்த விடயங்கள் தொடர்பில் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் முகநூலில் பதிவேற்றியதாக தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் ஊடகவியலாளர் மக்களின் குரலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய பிரதேச செயலாளர், பிரதேச சபை முன்னாள் தவிசாளர்,  பிரதேச சபை செயலாளர் ,உள்ளுராட்ச்சி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு ,வடமாகாண உள்ளுராட்ச்சி ஆணையாளர் உள்ளிடட பலருக்கும் எழுத்துமூலம் பல தடவை தெரியப்படுத்தியும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதற்கான  காரணம் என்ன என  ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்

சட்டத்தை நடைமுறைப்படுத்தாது இருந்துவிட்டு ஊடகவியலாளர்களை அடக்கும் இந்த முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் முடிந்தால் ஒரு மாத காலத்துக்குள் இதற்க்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற் கொண்டு தீர்வை வழங்குமாறும்  ஊடகவியலாளர் தவசீலன் தெரிவித்துள்ளார் 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment