25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

புதிய பிரேரணையை உறுதி செய்த இணை அனுசரணை நாடுகள்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் புதிய யோசனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு, இந்த புதிய யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அந்த நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜெர்மன், வட மெசிடோனியா, மொன்டிநீகிரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த யோசனையை முன்வைக்கவுள்ளன.

இலங்கையில் பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் சகல இனத்தவர்களுக்கு இடையில் காணப்படும் உரிமைகளை பாதுகாத்து சமாதானத்தை கட்டியெழுப்ப முழுவீச்சில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த நாடுகள் கூறியுள்ளன.

உள்கட்டமைப்பை கட்யெழுப்பல், கன்ணி வெடி அகற்றல், காணிகளை மீளளித்தல், உள்ளக இடம்பெயர்வுகளுக்கு உள்ளான மக்களை மீள் குடியேற்றல் போன்ற விடயங்களில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அந்த நாடுகள் கூறியுள்ளன.

ஆனால் நாட்டில் நிலையான அமைதி மற்றும் யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளில் முன்னேற்றம், யுத்தத்தில் தீங்கு விளைவித்த நடவடிக்கைகளிற்கான நிவர்த்தி ஆகியவற்றில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய பல நடவடிக்கைககள் உள்ளதாகவும் அந்த நாடுகள் கூறியுள்ளன.

ஆகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் அந்த நாடுகள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சோபா சேயா போட்டியில் திருமலை புகைப்படக் கலைஞர்கள்

east pagetamil

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

Leave a Comment