2019 – 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பை அளித்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, ராமராஜன் ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, செளகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா, தேவதர்ஷினி ஆகியோருக்கும் விருது.
இசையமைப்பாளர்கள்களில் டி.இமான், தினா ஆகியோர் விருது பெறுகின்றனர்.
இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.
பாடலாசிரியர்கள் காமக்கோடியான், காதல் மதி, படத்தொகுப்பாளர் ஆண்டனி, மெல்லிசை கோமகனுக்கும் விருது.
பின்னணிப் பாடகி சுஜாதா, பின்னணிப் பாடகர் அனந்து உள்ளிட்டோரும் விருது பெறுகின்றனர்.
தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர்கள் 19ஆம் திகதி மாலை தலைமைச் செயலகம் வர அழைக்கப்பட்டுள்ளனர்.