கிளிநொச்சி நகரில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த
நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
நெல் ஏற்றி சென்ற பார ஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில்
வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.
யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பார ஊர்தி நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
குறிதத் விபத்தில் மோதிய பார ஊர்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.