கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றும் (14) மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இதுவரை 397 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, கொவிட்-19 நிமோனியா மற்றும் சிக்கலான சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான பெண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். . அவரது மரணம் நேற்று முன்தினம் (13) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட உக்கிர ஈரல் செயலிழப்பு மற்றும் குருதி விஷமடைவு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த, 60 வயதான பெண் ஒருவர், மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதய தொற்று நிலை, இருதய செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான பெண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட உக்கிர குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான பெண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (13) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான பெண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 28ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.