வவுனியாவில் கேரளகஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
நேற்றயதினம்இரவு வவுனியா இறம்பைக்குளம் மற்றும் ஆச்சிபுரம் பகுதிகளில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒரு கிலோ 300 கிராம் கேரளகஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு நபர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.