28.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil
சினிமா

டுவிட்டரில் மீண்டும் டிரெண்டாகும் ‘விஜய் செல்பி’- காரணம் இதுதான்

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நெய்வேலியில் நடந்த போது, நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது.
பின்னர் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்த விஜய், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வருமானவரிச் சோதனை முடிந்த பின்னர், விஜய் மீண்டும் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
தினந்தோறும் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடிவந்த நிலையில், வருமானவரிச் சோதனைக்குப் பிறகு, விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதை அறிந்த நடிகர் விஜய் படப்பிடிப்பு முடிந்ததும் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி கூட்டமாக நின்ற ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் இந்த புகைப்படம் டுவிட்டரில் வெளியிடப்பட்டது.

விஜய்யின் செல்பி

நடிகர் விஜய், ரசிகர்களுடன் எடுத்த இந்த செல்பி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. தற்போது அந்த செல்பி எடுத்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில்  #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
கடந்தாண்டில் டுவிட்டரில் அதிகப்படியான ரீ-டுவிட்டுகளை பெற்ற ஒரு பிரபலத்தின் டுவிட் என்ற சாதனையை விஜய்யின் செல்பி படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

பெப்சி அலுவலகத்தில் நடிகை சோனா தர்ணா

Pagetamil

பழம்பெரும் உறுதுணை நடிகை பிந்து கோஷ் காலமானார்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!