உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளவர்கள் குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது.
இந்தியாவுடன் பிரித்தானியா துணை நிற்கும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். இதேபோல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும், ‛உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக மாயமான 100 பேர் மாயமாகியுள்ளனர். எங்கள் சிந்தனை அவர்களைப் பற்றியே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.