ஆந்திர அரசு வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை: நிதி அகர்வால் விளக்கம்

Date:

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நிதி அகர்வால். பிறகு ‘பூமி’, ‘கலகத் தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அவர், ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் ஜோடியாக ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்குப் பவன் கல்யாணுடன் அரசு காரில் நித்தி அகர்வால் பயணம் செய்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் பீமாவரம் நகரில் கடை திறப்புவிழா ஒன்றில் நித்தி அகர்வால் கலந்து கொண்டார். இதற்காக அவர் அம்மாநில அரசு வாகனத்தில் வந்திருந்தார். இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து நிதி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நான் சென்ற வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் கொடுக்கப்பட்டது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வாகனத்தை அரசு அதிகாரிகள் எனக்கு வழங்கியதாகக் கூறப்படும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது. அதில் உண்மையில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்