சாவகச்சேரி நகரசபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ள நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வசிக்காத காரணத்தால், அவர் நகரசபை உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தால் இந்த இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணியும், இலங்கை தமிழரசு கட்சி அணியும் தலா 7 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலைமையேற்பட்டுள்ளது.
இதன்மூலம், அதிகாரத்தை கைப்பற்றும் தரப்பை தீர்மானிக்க நாணயச்சுழற்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



