Site icon Pagetamil

கிண்ணியா கண்டல் காடு பகுதியில் வெள்ளத்தின் பின்னர் வெளிவந்திருந்த 36 கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் வெள்ளத்தின் பின்னர் வெளிவந்த 36 கை குண்டுகளை வியாழக்கிழமை (04) விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவிலாறு குளம் உடைப்பையடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது வெள்ள நீர் வழிந்தோடியது அடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்யும் போது வெள்ளத்தில் இருந்து வெளிவந்த குண்டுகளை கண்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது

இதையடுத்து விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு வரவழைக்கப்பட்டு அங்கு கைவிடப்பட்டிருந்த 36 கை குண்டுகளை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவை பெற்று இதனை செயலிழக்க வைப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசர் தெரிவித்தனர்.
-கனகராசா சரவணன்-

Exit mobile version