கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு

Date:

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய பூங்கா உடான காட்டுவழிப்பாதை இன்றையதினம் (20) அதிகாலை உகந்தை மலை தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விஷேட பூசை வழிபாடுகளை தொடந்து திறந்து வைப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

இதே வேளை கதிர்காம பாத யாத்திரையின் போது வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் எடுத்துச் இல்லாதிருக்குமாறும் சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை கதிர்காம புனித பூமியை தரிசிப்பதற்கு இந்த வருடத்தில் 30இ000 இற்கும் அதிகமானோர் பாத யாத்திரைக்காக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் சம்பிரதாய பூர்வமாக ஒவ்வொரு வருடமும் இந்தப் பாத யாத்திரைக்காக பக்தர்கள் கலந்துகொள்வதுடன்இ இவ்வாறு சுற்றாடல் நேயமாக பொலித்தீன்இ பிளாஸ்டிக் பயன்படுத்தாது இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து யாழ். மற்றும் குமண வனப் பூங்காக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பாரம்பரிய பாதயாத்திரையை சூழல் நேயத்துடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்ததுடன்இ பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனையின்றிய பசுமை பாத யாத்திரையாக மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.அதன்படி இம்முறை பாதையாத்திரையில் பங்குபற்றும் யாத்திரிகர்கள் சூழல் கட்டமைப்பிற்கு மற்றும் வனப் பூங்காக்களில் வாழும் விலங்குகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் செயல்படுமாறும் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி கோரிக்கை விடுத்தார்.

பாதயாத்திரைக்காக குமண மற்றும் யாழ பூங்காக்கள் ஊடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் எடுத்துச் இல்லாதிருக்குமாறும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாறசிங்க குறிப்பிட்டுள்ளார்.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்