உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை இடங்களை வென்ற குளியாப்பிட்டி மற்றும் உடுபத்தாவ பிரதேச சபைகளை இலங்கை பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பொதுஜன பெரமுன இரண்டு சபைகளையும் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற தேர்தலின் போது, பொதுஜன பெரமுனவின் விஜேசிறி ஏகநாயக்க பெரும்பான்மை வாக்குகளுடன் குளியாப்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி 21 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 09 இடங்களையும், பொதுஜன பெரமுன 06 இடங்களையும், ஐதேக 04 இடங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 இடங்களையும், சர்வஜன பலய 01 இடத்தையும் வென்றிருந்தது.
இதற்கிடையில், நேற்று நடைபெற்ற தேர்தலின் போது பொதுஜன பெரமுனவின் நிஹால் ஜெயசிங்க பெரும்பான்மை வாக்குகளுடன் உடுபத்தாவ பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 09 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 06 இடங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 03 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 01 இடங்களையும் பெற்றிருந்தன.



