Site icon Pagetamil

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இருவர்

மிரிஹான, ஜூபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் பல நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்த அயலவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (08) வீட்டிற்குச் சென்றபோது, ​​வீட்டின் அறையொன்றில் உள்ள படுக்கையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

வீட்டின் சமையலறை மாடியில் பெண் ஒருவரின் நிர்வாண சடலமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

80 வயதுடைய முதியவரும், 96 வயதுடைய பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.

இது குற்றமா அல்லது இயற்கை மரணமா என மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version