பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் போது, அந்த பெண் கவர்ச்சிகரமான ஆடை அணிந்திருந்தால் அவரது முறைப்பாடு வலுவில்லாதது என குறிப்பிட்டு, சந்தேகநபருக்கு பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
கேரளாவின் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றத்மே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுத்தாளரும் கலாச்சார ஆர்வலருமான சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கோழிக்கோடு மாவட்ட அமர்வு நீதிமன்றம், புகார்தாரர் அணிந்திருந்த உடை பாலியல் தூண்டுதலாக இருந்ததால் புகார் வலுவில்லாதது என விசித்திரமான கருத்தை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 18, 2020 அன்று நந்தி கடற்கரையில் ஒரு வெறிச்சோடிய இடத்தில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக முறைப்பாட்டாளர் புகார் கூறினார்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சிவிக் சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக மற்றொரு எழுத்தாளர் புகார் அளித்திருந்தார்.
சம்பவ தினத்தில் முறைப்பாட்டாளரின் புகைப்படங்களை இணைத்து சிவிக் சந்திரன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை அவதானித்த நீதிபதி, ”நீதிமன்றத்தில் சிவிக் சந்திரன் சமர்ப்பித்த படங்களிலிருந்து, புகார்தாரரின் ஆடைக் கட்டுப்பாடு பாலியல் தூண்டுதலாக இருந்தது தெளிவாகிறது. 74 வயதான மாற்றுத்திறனாளியான குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரரை வலுக்கட்டாயமாக மடியில் கொள்கிறது’ என குறிப்பிட்டு, சிவிக் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவிற்கு இந்திய தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் வழக்கில் புகார்தாரரின் உடைகள் குறித்து நீதிமன்றத்தின் அவதானிப்புகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார். அத்தகைய உத்தரவின் தொலைநோக்கு விளைவுகளை நீதிமன்றம் கவனிக்கவில்லை என்று அவர் ட்விட்டர் மூலம் பதிலளித்தார்.
The observations of the Kozhikode sessions court regarding a complainant's clothes, while granting bail in a sexual harassment case are extremely unfortunate and @ncwIndia strongly condemns it. The court has overlooked the far reaching consequences of such an order. https://t.co/oDuQpBFAjl
— Rekha Sharma (@sharmarekha) August 17, 2022