26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

யாழிற்கான பொருள் விநியோகம் சீராக இடம்பெறுகிறது; பதற்றம் வேண்டாம்; மொத்த விற்பனையாளர்கள் தகவல்!

யாழ் மாவட்டத்திற்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென யாழ்ப்பாண மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு பொருள் விநியோகத்தில் ஒரு வாரம் தடங்கல் ஏற்படுமென யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல் தவறானது என்றும், இந்த தகவலால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாமென்றும் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு மற்றும் தென்னிலங்கை கொந்தளிப்பான நிலவரங்களினால் கொழும்பிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை கொண்டு வருவதில் ஒரு வார தடங்கல் ஏற்படலாமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் நேற்று எச்சரித்திருந்தார்.

இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதுடன், பொருட்களை கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டினார்கள்.

எனினும், அரச அதிபரின் தகவல் தவறானது என்றும், பொருள் விநியோகம் சீராக நடந்து வருவதாகவும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

”யாழ் மாவட்டத்திற்கான பொருள் விநியோகத்தில் ஒரு வார தடங்கல் ஏற்படுமென அரசாங்க அதிபர் எச்சரித்திருந்தார். இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கிறோம்.

எனினும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. யாழ்ப்பாணத்திற்கான பொருள் விநியோகம் சீராக நடந்து வருகிறது. நேற்றும், இன்றும் கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றியபடி பாரவூர்திகள் யாழ்ப்பாணம் வந்துள்ளன.

கொழும்பில் கொள்வனவு செய்யக்கூடிய அனைத்து பொருட்களும் சீராக யாழ்ப்பாணத்திற்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலையில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த பாரவூர்திகள், 3 இடங்களில் போராட்டக்காரர்களால் வழிமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கான பொருள் விநியோகம் என்றதும் எந்த தடங்கலும் ஏற்படுத்தாமல் பயணத்தை தொடர வசதி செய்தனர்.

நிலைமை இப்படியிருக்க, பொருள் விநியோகம் ஒரு வாரம் பாதிக்கப்படுமென அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி பொருள் கொள்வனவிற்கு முண்டியடிப்பதை அவதானிக்கிறோம்.

பொருள் விநியோகம் சீராக இடம்பெறுவதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம்’ என தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

Leave a Comment