26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்தார்

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் நேற்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை ஒரே பிரசவத்தில் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், அவர்களில் மூவர் ஆண் குழந்தைகள், மூவர் பெண் குழந்தைகள் ஆவர்.

திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க மரவனாகொட தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரிப்பதற்காக சென்ற பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், நைன்வெல்ஸ் மருத்துவமனையின் சிரேஷ்ட செயல்பாட்டு முகாமையாளர் திரு.சுசந்த பீரிஸ் உள்ளிட்ட ஊழியர்களினால் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.

குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமரின் பாரியார், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் முகாமைத்துவ பணிப்பாளர் தியோ ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-பிரதமர் ஊடக பிரிவு-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

Leave a Comment