நாட்டில் நேற்று 561 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536,645 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 315 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 503,703 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி 19,302 பேர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1