விரைவான தடுப்பூசி இயக்கத்தின் காரணமாக இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதம வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வைத்தியர் திஸாநாயக்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொவிட்-பொஸிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையும் பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 700 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காலகட்டம் இருந்ததாகவும், அவர்களில் 200-250 நோயாளிகளிற்கு ஒட்சிசன் தேவைப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போது சுமார் 30-35 கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக 30 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், தற்போது ஏழு நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தேசிய மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், முந்தைய COVID-அலையின் போது கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆவர். பெரும்பாலான புதிய நோய்த்தொற்றுகள் கடுமையான சிக்கல்களை வெளிப்படுத்தாத போதும், அவர்கள் விரைவாக குணமடையவில்லை என்றார்.