கவிஞரும், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகனுக்கு ஜூலை 29ஆம் திகதி திருமணம் நடக்கவிருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உறுதி செய்திருக்கிறார்.
பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். அவர் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். பாடலாசிரியராக தமிழ் திரையுலகிற்கு வந்த
சினேகன் ஒரு கட்டத்தில் நடிகர் அவதாரம் எடுத்தார்.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கியதும் அதில் சேர்ந்துவிட்டார். தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார் சினேகன்.
தேர்தலுக்கு பிறகு மய்யத்தில் இருந்து பல நிர்வாகிகள் வெளியேறினார்கள். ஆனால் சினேகன் இன்னும் அதே கட்சியில் தான் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே சினேகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைப்பது குறித்து சக போட்டியாளர்கள் பேசினார்கள்.
இந்நிலையில் சினேகனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தான் சினேகனின் திருமணத்தை உறுதி செய்திருக்கிறார்.
சினேகன் தனக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு திருமாவளவன் கூறியிருப்பதாவது,
கவிஞர் சினேகன் அவர்கள் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என் அவர்கள் மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
கவிஞர் சினேகன் அவர்கள்
கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார்.மறைந்த எம்.என் அவர்கள்மூலம் அறிமுகமானவர்.
இனிய நண்பர்.வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள். pic.twitter.com/TK8ZJPC8cD
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 23, 2021