பூநகரி ஜெயபுரத்தில் நேற்று உயிரிழந்த கிராம சேவகரும், மனைவியும் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு இருவரும் உயிரிழந்தனர்.
பூநகரி பிரதேச செயலககத்தில் பணிபுரியும் கிராம சேவகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (52) மற்றும் அவரது மனைவி சுனித்தா (50) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
கிராம சேவகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
கிராம சேவகரின் மனைவியின் மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
யானை தாக்கியதற்கான அடையாளங்கள் உடலில் காணப்பட்டதாக திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
3