முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஜீப் வண்டியொன்றை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தெல்தெனியவில் உள்ள ஐ.சி.சி வீட்டுத் திட்டத்தில் ஆளில்லாத வீடொன்றின் கேரேஜில் ஜீப் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், பிலாவல பகுதியில் பெண் ஒருவருக்கு சொந்தமான அதே இலக்கத்தில் மற்றொரு ஜீப் இருப்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க தலைமையில் தெல்தெனிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1