26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
விளையாட்டு

அஷ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று!

பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின், மிக மோசமான அனுபவம், நலமாகி வருகிறோம். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் டெல்லி கபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த வாரம் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து வீடு திரும்பினார்.

“கொரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்தக் கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்” என்று அஸ்வின் கூறியிருந்தார்.

இந்நிலையில் அஸ்வின் குடும்பத்தார் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒரே வாரத்தில் எனது குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குடும்பத்தில் உள்ள இளையவர்கள் மூலம் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அனைவரும் வெவ்வேறு வீடுகள், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மிக மோசமான வாரம் இது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் 3 பேரில் ஒருவர் குணமடைந்துள்ளார். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மட்டுமே இந்தத் தொற்றுக்கு எதிராகப் போராட ஒரே வழி.

உடல் வலிமையைவிட மனவலிமை மட்டுமே இந்த நோயிலிருந்து நம்மை மீட்கும். ஐந்திலிருந்து எட்டு நாட்கள் மிகக் கடினமானதாக இருந்தது. உதவி செய்யப் பலர் இருந்தனர், உதவினர். ஆனால், யாரும் உங்களுடன் இருக்க முடியாது. நீங்கள் தனிமையில் இருப்பீர்கள். ஏனென்றால் இந்த நோய் உங்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் நோய் ஆகும். தயவுசெய்து உரியவரை அணுகி உதவி தேடுங்கள்” என ப்ரீத்தி அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், தன் பெயரை நீக்கி முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என மாற்றி வைத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment