தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி அருகே கனரக லொறியொன்று, இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்தில் நடந்தது.
இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள், இருசக்கர வாகனத்தில் பயணித்தபடி ரிக்ரொக் வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்போது கனரக லொறியுடன் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேர் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கும்மிடிப்பூண்டி இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த தயாளன்(19), சாள்ஸ் (22) மற்றும் மதுரை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜோன் (23) ஆகியோரே உயிரிழந்தனர்.
ஜோன் தன்னுடைய உறவினர்கள் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வந்துள்ளார்.
அப்போது, மேம்பாலம் அருகே அதே திசையில் சென்ற கனரக லொறியை முந்தி சென்றபோது நிலைத்தடுமாறிஈ லொறியுடன் மோதி மூன்று பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது.
விபத்தின் பின் தப்பி ஓடிய லொறி ஓட்டுனரை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.