26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

‘சாதியை சொல்லி திட்டியதால் அடித்துக் கொன்றேன்’: யாழில் பெண்ணை கொன்றவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

யாழ்ப்பாணம், அத்தியடியில் குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சாதி ரீதியாக தன்னை இழிவுபடுத்தி பேசியதால் கோபமடைந்து, அந்த பெண்ணை தாக்கியதாகவும், அவர் மரணமடைந்து விட்டதாகவும், சாட்சியை மறைக்க மகளை கொலை செய்ய திட்டமிட்டதையும் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரையண்டிய, அத்தியடியில் 52 வயதுடைய கலாநிதி சுப்ரமணியம் என்பவர் கடந்த 12ஆம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த சமயம் அவரது 24 வயதான மகள் வீட்டிற்குள் இருந்தார்.

கலாநிதி நீண்டகாலமாக கணவனை பிரிந்து வாழ்கிறார். நாவற்குழியை சேர்ந்த அவர், கடந்த 3 வருடங்களின் முன்னர் அங்கிருந்து குடிபெயர்ந்து, அத்தியடியில் வீடு வாங்கி, குடிபுகுந்தனர்.

கலாநிதிக்கு, நாவற்குழியை சேர்ந்த 60 வயதான ஒருவருடன், கடந்த 10 வருடங்களாக நெருக்கமான உறவிருந்துள்ளது.

அவர், கலாநிதியின் அத்தியடி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அவர்களிற்குள் அண்மைக்காலமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு வேலைகளிற்காக ஆட்களை கூப்பிடும்படி கலாநிதி கூறினால், அந்த வேலைகளை தானே செய்து கொண்டு, பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அவர் தன்னிடமிருந்து அதிகமான பணம் வாங்குவதாக கலாநிதி முரண்பட, அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் வரும்போது, வீட்டுக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது என தாயார் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளதால், மகள் அறைக்குள் சென்று இருந்து கொள்வது வழக்கம். கொலை நடந்த அன்றும் அவ்வாறே இருந்துள்ளார்.

கொலைச்சம்பவம் குறித்து மகள் அளித்த தகவலில்-

“மாலை 3.30 மணியளவில் அம்மா பெரிதாக அலறும் சத்தம் கேட்டது. மாலை 6 மணியளவில் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் சத்தம் கேட்டது. 6.30 மணியாகியும் அம்மா வீட்டுக்குள் வரவில்லை. இதனால் அவரது தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தினேன். வீட்டின் முன்பக்கத்தில் தொலைபேசி ஒலித்தது.

பின்கதவு வழியாக சென்று பார்த்தேன். அம்மா தலையில் இரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டார்“ என மகள் கூறியுள்ளார்.

வீட்டுக்குள்ளிருந்து முன்கதவு வழியாக வெளியில் வருபவர் சிக்கும் விதமாக, இரும்புக் கம்பியில் மின்சார இணைப்பு ஏற்படுத்தி விட்டே அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

அவர் நாவற்குழி பகுதியை சேர்ந்தவர். அவரது வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, மோட்டார் சைக்கிள் மட்டுமே நின்றது. சந்தேகநபர் தலைமறைவாகி விட்டார்.

அவர் வீட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று காலை நாவற்குழியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

“உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகின்றேன். அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை வழங்கி வந்தேன்.

அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன்.

சம்பவதினத்திலன்று அவர் என்னை சாதி வேறுபாடு சொல்லி பேசிவிட்டார். அதனால் ஆத்திரத்தை அவரை கட்டையால் தாக்கிவிட்டேன். அவர் உயிரிழந்துவிட்டார்” என்று சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்திலன்று, குழாய் பதிப்பதற்காக சிறிய கிடங்கு தோண்டுமாறு கொல்லப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். எனினும், அன்று அந்த நபர் முரண்டு பிடித்துள்ளார். பணத்தகராற்றினால் சில காலமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் இது நிகழ்ந்திருக்கலாம்.

தான் கூலிக்கு வேலை செய்வது தெரிய வந்தால் வீட்டில் பிரச்சினை வரும் என சந்தேகநபர் குறிப்பிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், கலாநிதி சாதி பாகுபாடு சொல்லி திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்து கட்டையால் அவரது தலையில் அடித்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த கொலையில் தனது பங்கை மறைப்பதற்காக வீட்டிலிருந்த மகளை கொல்லவும் திட்டமிட்டுள்ளார்.

தான் வீட்டுக்கு வந்ததை மகள் அறிந்திருந்ததால், அவர் பொலிசாரிடம் விடயத்தை சொல்லி விடுவார் என பயந்த சந்தேகநபர், மகளை கொல்லும் நோக்கத்துடன் வீட்டுக்கு வெளியில் அழைத்துள்ளார்.

இரண்டு மூன்று முறை கதவை தட்டியதாகவும், ஆனால் மகள் வெளியில் வரவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வீட்டின் முன்கதவு வழியாக தாயின் சடலத்திற்கு அருகில் மகள் வந்தால் சிக்கும் விதமாக மின்சார பொறி வைத்துள்ளார். இரும்பு கம்பியில் மின்சார இணைப்பு ஏற்படுத்தியிருந்தார்.

எனினும், அதிர்ஷ்டவசமாக மகள் பின்கதவு வழியாகவே தாயாரிடம் வந்துள்ளார்.

அந்த வீட்டில் இருந்த 30 இலட்சம் ரூபா பணத்தை பொலிசார் மீட்டு, பாதுகாப்பாக மகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டிருந்தனர்.

கைதான சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

Leave a Comment