27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
குற்றம்

யாழில் வீடுடைத்து அங்கர் பால்மா கொள்ளை!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (22) மாலை கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிலிருந்த ஒரு பவுண் தங்கத்தோடு, இருபதாயிரம் ரூபா பணம், முப்பது அங்கர் பால் மா பெட்டி ஆகியன கொள்ளை கும்பலால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா இந்துகல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்த தருணத்தில் கொள்ளை கும்பல் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து வீட்டின் பிரதான முன்வாசல் கதவை கொத்தி உட்சென்று கொள்ளையிட்டுள்ளனர்.

ஒரு பவுண் தங்க நகை, முப்பது அங்கர் பால் மா பெட்டி, இருபதாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (23) வீட்டின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனநலம் குன்றிய சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவருக்கு 30 வருட சிறை!

Pagetamil

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

Leave a Comment