சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இளம் யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதால் மனவிரக்திக்கு உள்ளாகிய நிலையில், இளம் பெண் உயிரை மாய்த்துள்ளார்.
உடுவில், மல்வம் பகுதியில் நேற்று (10) இந்த சம்பவம் நடந்தது.
நேற்று 21 வயதான யுவதியொருவர் தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார். அவரது மரணம் குறித்த விசாரணையின் போது, அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது, சக நண்பியொருவருக்கு அனுப்பிய குரல் பதிவொன்றை கண்டறிந்தனர்.
அதில், தனது சகோதரன் போதைப்பொருள் பாவித்து விட்டு, தன்னை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியதாகவும், வாழ விரும்பவில்லையென்றும் அந்த குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து 26 வயது மதிக்கத்தக்க சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் வாக்குமூலமும் பொலிசாரால் பெறப்பட்டுள்ளது.
யுவதி வீட்டில் சகோதரனால் ஏற்கெனவே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு வந்தாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யுவதியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.