மட்டக்களப்பில் போதை வியாபாரிகள் பலர் கைது!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 1370 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும், வவுணதீவில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒரு வரையும்.

கல்குடாவில் 4000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒரு வரையும் ஏறாவூர், 820 மில்லி கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும் கரடியனாறில் 1000 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும், கொக்கட்டிச்சோலையில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த 3 உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கசிப்பு கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 7 பேரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்