மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

Date:

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதியாகியுள்ளது.

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றைக் கடற்படையினர் இன்று (14) கையகப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் அந்தப் படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குறித்த டிங்கி படகிலிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டிருந்தன.

முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சோதனையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்தப் படகில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் போதைப்பொருள் உள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யபட்ட இரண்டு சந்தேகநபர்களும், ஹஷிஷ் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்