அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

Date:

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க அவர்களால் இன்று (22) வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற் சங்கமொன்றின் அழுத்தங்களுக்காக, அரச உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்ய முடியாது என்று, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றதுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் சங்க பணிப் புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்