புங்குடுதீவு கடற்படை முகாமில் பெண் சிப்பாய்க்கு பாலியல் துன்புறுத்தல்: ஆண் சிப்பாய்க்கு விளக்கமறியல்!

Date:

புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கடற்படை வீரர் ஒருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படை சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25 திகதி பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்ட நிலையில் அவர்களை இருவரையும் கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் வட பகுதி கடடளை பணியகத்தின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் இவர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காங்கேசந்துறை பொலிசார் விசாரணைகளின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

19 வயதான அந்த யுவதி இடமாற்றம் பெறவிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் கடற்படை முகாமின் பெண்கள் பகுதிக்குள் நுழைந்த 22 வயதான சிப்பாய், அந்த யுவதியின் கழுத்தை நெரித்து, முகத்தை தலையணையால் அழுத்தி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முனைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

யுவதியின் அலறல் சத்தம் கேட்டு, ஏனைய கடற்படையினர் துரிதமாக செயற்பட்டு, தப்பியோடிய கடற்படை சிப்பாயை மடக்கிப்பிடித்துள்ளனர்.

மருத்துவ அறிக்கையில் பாலியல் பலாத்காரம் நடைபெற்றமைக்கு உரிய சான்றுகள் காணப்பட்டதால் கடற்படை வீரரையும் கடற்படை யுவதியையும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிசாரிடம் காங்கேசந்துறை பொலிசார் ஒப்படைத்தனர்

ஊர்காவல்துறை போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நேற்றைய தினம் (02) ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் கடற்படை வீரரை முற்றபடுத்திய வேளை எதிர்வரும (16/10/2025) வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்