Site icon Pagetamil

செம்மணியில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விபரம்!

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 42 வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (03) புதன்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 42 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, கட்டம் கட்டமாக இதுவரையில் 51 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 213 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

அதேவேளை இதுவரையில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version