அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

Date:

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளநிலையில் அவற்றை பல பாகங்களாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய மீனவர்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு தரித்து நின்ற படகுகளுக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றில் 07 படகுகளை இந்திய மீனவர்களுக்கு வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து படகுகளின் உரிமையாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்று கடந்த 25 ஆம் திகதி வந்து தமது படகுகளைப் பார்வையிட்டனர்.

இவற்றில் 33 படகுகள் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து அவை துண்டுகளாக உடைக்கப்பட்டு அச்சு வேலி கைத்தொழில் பேட்டைக்கு ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எஞ்சிய படகுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றில் இடம் பெற்று வருகின்றன.

இதேவேளை நாளைய தினம் குறித்த துறைமுகத்தில் ஜனாதிபதியினால் மூன்றாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்!

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய...

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்...

புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி

பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்