படகு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு-வடமராட்சியில் சம்பவம்.

Date:

யாழ்.வடமராட்சி கிழக்கு சுண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் நேற்று கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம் பெற்றது.

இதன் போது மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு குறித்த இளைஞன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரிவிக்கப்படுகிறது. சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சீனாவை வந்தடைந்தார் ட்ரம்ப்

போட்டி வல்லரசுகளுக்கு இடையேயான ஆழ்ந்த பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், சீனத் தலைவர்...

அடை மழையால் ஒருவர் பலி: 200 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர்...

பாடசாலைக்குள் மாணவன் கத்திக்குத்து: 5 மாணவர்கள் காயம்!

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்