கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (28) முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்தனர்.
அதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2022 வரை இலங்கை கடற்படையின் 24வது தளபதியாக பணியாற்றினார்.

