Site icon Pagetamil

விசேட சோதனையில் 300 இற்கு மேற்பட்டோர் கைது!

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்று (04) இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையை பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தன.

நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் செயல்முறையின் மற்றுமொரு அத்தியாயமாக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரிவினரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version