இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம்

Date:

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று (30) தொடங்குகிறது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். இன்று (30) முதல் ஜூலை 05 வரை நடைபெறும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில், 111 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வாரத்தில், ஒவ்வொரு நாளும் 1100 குழுக்கள் பரிசோதனைக்காக ஈடுபடுத்தப்படும் என்றும், ஒவ்வொரு குழுவிலும் ஒரு சுகாதார உத்தியோகத்தர், ஒரு காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் ஒரு முப்படை உத்தியோகத்தர் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த வாரம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக இந்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை, மாத்தளை, பதுளை, மொனராகலை, காலி, கல்முனை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒழிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இரண்டாவது கட்டம் ஜூலை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கண்டி, குருநாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு மாநகர சபை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்