நேற்று மாலை (20) பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்
இந்த சம்பவம் குறித்து பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ பேஸ்புக்கில் பதிவிட்டு, இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
5,6 மாதங்களின் முன்னர் தம்பி கத்தியால் அண்ணனை குத்திக் காயப்படுத்தியுள்ளார். அண்ணனின் மார்பில் நரம்பு பாதிக்கப்பட்டு, 1 மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.
தற்போது, அண்ணன் அரிவாளால் தம்பியை வெட்டியுள்ளார்.
இப்படியான முட்டாள்தனமான செய்கைகளால் நாட்டின் கோடிக்கணக்கான பணம் விரயமாவதாக தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சகோதரர்களும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, காயங்களை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தம்பியை தாக்கிய அண்ணனை பொதுமக்கள் மடக்கிப் பிடிக்கும் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

