இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; ஐ.பி.எல். நடப்பு சீசன் நிறுத்திவைப்பு

Date:

போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் யு.ஏ.இ-க்கு மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்து.

ஆனால், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கு கோபுரம் ஒன்று பழுதடைந்து இருக்கிறது. மேலும் இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என பி.சி.சி.ஐ. விளக்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது போர் பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய பி.சி.சி.ஐ இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான கூட்டம் தற்போது நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் ஐ.பி.எல். நடப்பு சீசனை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடைபெறும் திகதி குறித்த முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்