அரகலயவில் வீடெரிந்ததாக ரூ.62 கோடி இழப்பீடு பெற்ற 92 உள்ளூர் அரசியல்வாதிகள்

Date:

2022 ஆம் ஆண்டு அரகலய காலப்பகுதியில் தீ வைப்பால் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் 92 பேர், 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளதாக இன்றுவெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஹொரணை கோனபொல பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.

2022 அரகலய காலப்பகுதியில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற தீ வைப்பு சம்பங்களால் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையின்படி, 43 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு 1.22 பில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்