Pagetamil
கிழக்கு

சிகை அலங்கரிப்பு நிலைய கதிரையில் உட்கார்ந்த நிலையில் 3 நாட்களாக இருந்த சடலம்!

3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலம் ஒன்றினை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று(15) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என்பதுடன் உயிரிழந்தவர் வாடகை கடையில் சிகை அலங்கார கடை நடத்தி வந்தவர் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர் வேலையின் நிமித்தம் சிகை அலங்கார கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தை கழிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரியவந்துள்ளதுடன் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போலீசார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

இதையும் படியுங்கள்

கடந்த வாரம் திருமணம்… விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் இருந்த இளைஞனை பலியெடுத்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்!

Pagetamil

வயலில் நின்றவரை தாக்கிய மின்னல்

Pagetamil

முஷாரப் என்ற நபருக்காக மக்கள் இல்லை; கட்சிக்காவே உள்ளனர்: முன்னாள் உதவித் தவிசாளர் தாஜுதீன்

Pagetamil

சம்மாந்துறையில் மயில் – குதிரை மோதல்: வேட்பாளரும், சகோதரரும் வைத்தியசாலையில்!

Pagetamil

தாயை கொன்ற மகன்

Pagetamil

Leave a Comment